வெள்ளி, 26 நவம்பர், 2010

தமிழ் கட்சிகள் அரங்கம் ஜனாதிபதியை சந்தித்துள்ளது!.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கும் தமிழ் கட்சிகளின் அரங்கத்திற்கும் இடையே இன்று முற்பகல் சந்திப்பு ஒன்று இடம் பெற்றுள்ளது.

இதனிடையே தமிழ் கட்சிகளின் அழைப்பு குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு பரீசிலித்துள்ளதாகவும் இதன்படி அரங்கத்தின் அங்கம் வகிக்கும் கட்சிகள் சிலவற்றுடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு பேச்சு நடத்தும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழ் கட்சிகளின் அரங்கத்தின் அங்கம் வகிக்கும் தமிழ் தேசிய விடுதலை கூட்டமைப்பின் செயலாளர் எம் கே சிவாஜிலிங்கம் இது குறித்து எமது சேவைக்கு தகவல் தருகிறார்.

தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் கொழும்பில் வசிக்கும் போது சிங்களவர்கள் ஏன் வடக்கில் மீள்குடியேற முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷ தமிழ் கட்சிகள் அரங்கத்திடம் கேள்வி எழுப்பியதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் குமரகுருபரன் தெரிவித்தார்.

தமிழ்க் கட்சிகளின் அரங்கம் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்க்ஷவை சந்தித்தது. இங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பாக குருபரன் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கில் தற்போது இராணுவத்தினருக்கு சொந்தமானவர்களை மீள்குடியேற்றம் செய்து வருவதாக முன்னாள் நடாளுமன்ற உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் சுட்டி காட்டிய போது, ஜனாதிபதி மறு மொழியாக, கொழும்பில் தமிழ் முஸ்லிம் மக்கள் வாழும் போது வடக்கில் சிங்களவர்கள் ஏன் மீள்குயேற முடியாது. இதனை யாராலும் தடுக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மீள்குடியேற்றம் பற்றி கருத்து தெரிவித்த ஜனாதிபதி, மீள்குடியேற்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்ய கட்சிகளின் அரங்கத்தில் இருந்து பிரதிநிதி குழுக்களை ஏற்படுத்தி அதன் மூலம் நடவடிக்கைள் முன்னெடுக்ப்படும் என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அரசியல் கைதிகள் மற்றும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட கைதிகளை விரைவில் விடுதலை செய்ய முடியாது. சிறு குற்றம் புரிந்தவர்களை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து கட்ட கட்டமாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு சட்டமா அதிபருக்கு நான் வலியுறுத்துகின்றேன் என தெரிவித்தார்.

மேலும் கடந்த கால அனுபவங்கங்களைக் கொண்டு இராணுவ முகாம்கள் அகற்ற முடியாது எனவும் பாதைகள் அபிவிருத்தி விரைவில் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல