வெள்ளி, 26 நவம்பர், 2010

மகாத்மாகாந்தி, நேரு ஆகியோரது கொள்கைகளை இந்தியா மீறிவிட்டது

இந்தியாவின் நடவடிக்கைகள் எனக்கு மிகுந்த வேதனையைத் தருகிறது. மகாத்மா மற்றும் நேருவின் கொள்கைகளை இந்தியா மீறிவிட்டதாகவே கருதுகிறேன் என மியன்மாரின் எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூகி தெரிவித்துள்ளார்.

மியன்மாரில் 20 ஆண்டுகளுக்கு மேலாக சிறையிலிருந்த ஆங் சான் சூகி தற்போது விடுதலை செய்யப்பட்டு நாட்டில் சுதந்திரமாக நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,

இந்தியா, மியன்மார் இராணுவ அரசுடன் பல்வேறு உறவுகளை வைத்துள்ளது. வர்த்தக ரீதியான உறவுகள் அதிகம் உள்ளது. இது எனக்கு கவலையளிக்கிறது. இந்தியா எங்களோடு இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

மேலும் மகாத்மாகாந்தி, நேரு ஆகியோரது கொள்கைகளை இந்தியா மீறிவிட்டதாக கருதுகிறேன். அதை மாற்றிக்கொள்ள வேண்டும்.

மியன்மாரில் ஜனநாயகத்தை நிலை நிறுத்த இது தான் உகந்தநேரம். இந்த நேரத்தில் இந்தியா எங்களோடு நட்பாக இருந்து ஊக்கப்படுத்த வேண்டும்.

இந்தியாவுடன் இணைந்து செயற்பட நான் மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் என்றார்.

டில்லியில் தன் பட்டப்படிப்புகளைள படித்த சூகி, 1988க்கு முன்பு நீண்ட காலம் இமாச்சல பிரதேசமான சிம்லாவில் தங்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல