வெள்ளி, 26 நவம்பர், 2010

நடிகை வனிதா, முன்ஜாமீன் கேட்டு ஐகோர்ட்டில் மனுதாக்கல்

நடிகர் விஜயகுமார் தொடர்ந்த வழக்கில் அவரது மகளும், நடிகையுமான வனிதா முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

குடும்ப பிரச்சினை

சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்தவர் ஆனந்தராஜன். இவரது மனைவி நடிகை வனிதா. இவர் பிரபல நடிகர் விஜயகுமாரின் மகள். வனிதாவின் குடும்பத்துக்கும், விஜயகுமாருக்கும் இடையே குடும்ப பிரச்சினை உள்ளது.

இந்த நிலையில், போலீசில் ஒருவர் மீது ஒருவர் புகார் செய்யும் அளவுக்கு குடும்ப விவகாரம் வெடித்தது. இந்த நிலையில் மதுரவாயல் போலீசில் விஜயகுமார் புகார் ஒன்றை கொடுத்தார்.

பொய் புகார்

அதனடிப்படையில் ஆனந்தராஜை போலீசார் கைது செய்தனர். அதைத் தொடர்ந்து முன்ஜாமீன் கேட்டு சென்னை ஐகோர்ட்டில் வனிதா மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில், எங்கள் மீது விஜயகுமார் பொய் வழக்கு தொடர்ந்துள்ளார். இதில் எனது கணவரை கைது செய்துவிட்டனர். என்னையும் கைது செய்யக்கூடும் என்று அஞ்சுகிறேன். எனவே எனக்கு முன்ஜாமீன் அளித்து உத்தரவிட வேண்டும் என்று கூறியுள்ளார்.

இந்த மனு இன்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வருகிறது.

நிபந்தனை ஜாமீன்

``வனிதாவின் கணவர் ஆனந்தராஜ் என் கையை முறுக்கி தள்ளியதால் கை மணிக்கட்டில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றேன். இதனால் ஆனந்தராஜ் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று நடிகர் விஜயகுமார் கொடுத்த புகாரின்பேரில் மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆனந்தராஜை விசாரணைக்கு அழைத்து சென்றனர். அதன்பிறகு அவரை கைது செய்து பூந்தமல்லி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

கணவரை ஜாமீனில் கொண்டு வரும் முயற்சிகளை வனிதா தனது வக்கீல்கள் மூலம் மேற்கொண்டார். ஆனந்தராஜ் ஜாமீன் மனு மீதான விசாரணை நேற்று வந்தது. வனிதா மற்றும் அவருடைய உறவினர்கள் ஆகியோர் காலை 11 மணிக்கு பூந்தமல்லி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.

ஆனந்தராஜை நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்வதாக நீதிபதி ராமநாதன் உத்தரவிட்டார். ஆனந்தராஜ் தினமும் காலை 10 மணிக்கு மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து இட வேண்டும் என்றும் நீதிபதி கூறினார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல