வெள்ளி, 26 நவம்பர், 2010

சிறைவாசத்திலிருந்து தப்பிப்பதற்கு பிறிதொருவரை கொன்று தான் தற்கொலை செய்ததாக நாடகமாடிய நபர் கைது

சிறைத்தண்டனையிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக பிறிதொருவரை கொன்று, அவரது சடலத்தை தான் தற்கொலை செய்து கொண்டதாக நம்பவைப்பதற்கு பயன்படுத்திய நபரொருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் தாய்வானில் இடம் பெற்றுள்ளது.

சண் என்ற சுருக்கப் பெயரால் அழைக்கப்படும் மேற்படி 33 வயது நபர், 29 வயது இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று அவரது கைகளை பின்புறமாக கட்டி வாடகைக் காரொன்றில் அவரை வைத்து மூடி அக்காருக்கு தீ வைத்துள்ளார்.

உள்ளூர்வாசிகள் வழங்கிய தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், காரிலிருந்த நபரின் உடல் முழுமையாக எரிந்து உருத்தெரியாமல் மாறுவதற்கு முன் தீயை அணைத்தனர்.

சண், தீ வைக்கப்பட்டு உயிரிழந்த நபரின் அடையாள அட்டையை திருடிச் சென்று அந்த அட்டையில் இருந்த இறந்தவரின் புகைப்படத்தை அகற்றி தனது புகைப்படத்தை இணைத்துள்ளார்.

இறந்தவரை விட சுமார் 25 கிலோகிராம் நிறை கூடிய மேற்படி நபர், இந்த அடையாள அட்டை புகைப்படம் தான் மெலிந்து இருந்த சமயத்தில் எடுக்கப் பட்டதாக தெரிவித்துள்ளார்.

அவருக்கு பாலியல் குற்றச்சாட்டு ஒன்றின் நிமித்தம் ஏற்கனவே 8 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல