ஞாயிறு, 28 நவம்பர், 2010

கடந்த 50 ஆண்டுகளில் ஒரே கிராமத்தில் 98 இரட்டையர்கள்

சீனாவில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த 50 ஆண்டுகாலங்களில் 98 இரட்டை குழந்தைகள் பிறந்து உள்ளன. இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தி உள்ள கிராமத்தின் பெயர் ஹேஷான் கிராமம். இது ஹூனான் மாநிலத்தில் உள்ளது. 2 சதுர கி.மீ. பரப்பளவே உள்ள இந்த கிராமத்தில் தான் கடந்த 50 ஆண்டுகளில் 98 குடும்பங்களில் இரட்டை குழந்தைகள் பிறந்து உள்ளன. இதற்கு என்ன காரணம்.?

இந்த கிராமத்து கர்ப்பிணி பெண்கள் கிராமத்து கிணற்று தண்ணீரை குடித்தது தான் இரட்டை குழந்தைகள் பிறந்ததற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இது தவிர இந்த கிராமம் 1700 மீட்டர் உயரம் உள்ள மலை உச்சியில் உள்ளது. இதனால் போதுமான சூரிய வெளிச்சமும், சுத்தமான காற்றும் கிடைக்கிறது. இதனால் இரட்டை குழந்தைகள் இந்த கிராமத்தில் அதிகம் பிறக்கின்றன என்று கூறுவோரும் உள்ளனர். மரபணு குறித்து ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் பெற்ற நிபின் கூறுகையில், சாதகமான இயற்கை சூழலும் இரட்டை குழந்தைகள் பிறப்பதற்கு காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்தார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல