ஞாயிறு, 28 நவம்பர், 2010

புலிகளின் சர்வதேசத் தலைவர் புலனாய்வுப் பிரிவால் கைது

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பைச் சேர் ந்த சிரேஷ்ட தலைவர் ஒருவர் கொ ழும்பில் கைதுசெய்யப்பட்டுள்ள தாக தகவல்கள் வெளியாகியுள்ளன.முதலீட்டாளர் என்ற போர்வை யில் இலங்கைக்கு விஜயம் செய்தி ருந்த போது அரச புலனாய்வுப்பிரி வினர் குறித்த நபரை கைதுசெய் துள்ளதாக படைத்தரப்பை ஆதா ரங்காட்டி கொழும்பில் செய்திகள் வெளியாகியுள்ளன.

கிரன் என்ற அழைக்கப்படும் குறி த்த சிரேஷ்ட தலைவர் புலிகளின் சர் வதேச வலையமைப்பு நிதிக்கொடு க்கல் வாங்கல்களுடன் தொடர்பு டையவர் என அந்தச் செய்திகளில் கூறப்பட்டுள்ளது. கொழும்பின் முக்கிய ஹோட்டல் ஒன்றில் வைத்து குறித்த சந் தேகநபரை புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

அவுஸ்திரேலியா மற்றும் சுவிட் சர்லாந்து ஆகிய நாடுகளில் தமி ழீழ விடுதலைப்புலிகளின் சார்பில் நிதி திரட்டும் நடவடிக்கைகளில் குறி த்த நபர் ஈடுபட்டு வந்ததாக இவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 1999 ஆம் ஆண்டு முதல் அதி கமாகத் தேடப்பட்டுவரும் குற்றவா ளிகள் பட்டியலில் கிரனின் பெயர் முக்கிய இடத்தை வகித்துவந்ததா கவும் அந்தத் தகவல்களில் குறிப்பிடப்படுகிறது.

தெனியாய பிரதேசத்தில் குறித்த நபருக்கு தேயிலைத் தோட்டம் ஒன்று உள்ளதாகவும் தப்பிச் சென்ற விடுதலைப்புலி உறுப்பினர்கள் முதலீட்டாளர்கள் என்ற போர்வை யில் மீண்டும் நாடுதிரும்பி வருவ தாகவும் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாக கூறப்படுகின் றது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல