ஞாயிறு, 28 நவம்பர், 2010

தமிழ்,முஸ்லிம் கட்சிகளுடனான சந்திப்பை இந்திய அமைச்சர் கிருஷ்ணா தவிர்த்தார்

தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு, தமிழ்க் கட்சிகளின் அரங்கம் மற்றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா நேற்றுக் காலை சந்திப்பதாக இருந்த போதிலும் இறுதி நேரத்தில் அச்சந்திப்புக்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக் கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான நான்கு நாள் விஜய மொன்றை மேற்கொண்டு கொழும்பு சென் றிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா தனது விஜயத்தின் இறுதி நாளான நேற்றுக்காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் கட்சிகளின் அரங்கம் மற் றும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகளை தனித்தனியாக சந் திப்பதாக இருந்தார். இச் சந்திப்புக்காக குறிப்பிட்ட அமைப்புக் களின் பிரதிநிதிகளும் மனுக்களையும் தயா ரித்துக்கொண்டு தயாராக இருந்தனர். இருந்த போதிலும் இச்சந்திப்பு இடம்பெறுவதற்கு சற்று முன்னர் இந்திய அமைச்சருக்கு சந்திப்புக்கு நேரம் இல்லை எனவும் அதனால் சந்திப்புக் கள் இரத்து செய்யப்படுவதாகவும் இந்தியத் தூதரகத்தினால் தெரிவிக்கப்பட்டது.

இக் குறிப்பிட்ட கட்சிகள் இறுதிவேளை யில் சந்திப்பு இரத்து செய்யப்பட்டிருப்பதால் பெரும் ஏமாற்றம் அடைந்திருப்பதாக தெரி கின்றது.நேற்றுக்காலை தமிழர் விடுதலைக் கூட் டணியின் தலைவர் ஆனந்தசங்கரியின் இல்லத்தில் கூடிய தமிழ்க் கட்சிகளின் அரங் கத்தின் பிரதிநிதிகள் அங்கிருந்து இந்திய அமைச்சரை சந்திப்பதற்காக புறப்பட தயா ராக இருந்த வேளையிலேயே சந்திப்பு இரத்து செய்யப்பட்ட தகவல் அவர்களுக்கு தெரிவிக் கப்பட்டது. இதனால் இந்திய அமைச்சரிடம் கையளிப்பதற்கு தயாராக கொண்டு சென்றிருந்த மனுவை இன்று இந்தியத் தூதரகத்தில் கையளிப்பது என தமிழ் கட்சிகளின் அரங்கம் தீர்மானித்துள்ளது. இதேவேளை தன்னுடைய விஜயத்தின் இறுதி நாளான நேற்று அமைச்சர் கிருஷ்ணா தென் மாகாணத்திற்கு விஜத்தை மேற்கொண் டார்.

தென் மாகாணத்திற்கான விஜயத்தை அவர் மேற்கொள்வதாகவும் அதனாலேயே தமிழ்,முஸ்லிம் கட்சிகளுடனான சந்திப்பு இரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. இலங்கைக்கான தன்னுடைய நான்கு நாள் விஜயத்தை முடித்துக்கொண்டு நேற்று மாலை கிருஷ்ணா நாடு திரும்பினார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல