பிரித்தானியாவின் இரும்புப் பெண்மணி என அழைக்கப்பட்டார்.
இவர் 1990ம் ஆண்டு ஐக்கிய இராச்சிய தலைமை அமைச்சர் மார்கரெட் தாட்சர் தனது பதவியை விட்டு விலகினார்.
அரசியல்
ஐக்கிய இராச்சியம் ஒரு அரசியலமைப்புச் சட்ட முடியாட்சியாகும் (constitutional monarchy). அதை அரசாளும் அதிகாரம் பிரதமரின் தலைமையிலுள்ள அரசிடம் உள்ளது. பிரதமரையும் மற்ற
அமைச்சர்களையும் கொண்டது அமைச்சரவை. மகுடாதிபதிக்கு ஆலோசனைகள் வழங்கும் ஆலோசனைக்குழுவில் (privy council) அமைச்சரவை ஒரு துணைக்குழுவாகும். அரசாளும் உரிமையைக் கொண்ட மன்னர், நாட்டின் தலைவராகத் திகழ்கிறார்.
எனினும், நடைமுறையில் அவரது அரசு கீழவையான மக்களவைக்குக் (British House of Commons) கட்டுப்பட்டே செயல்பட இயலும். மக்களவையானது ஐக்கிய இராச்சியத்தின் மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப் பட்ட ஒரே பாராளுமன்ற அவையாகும். மரபுவழிப் படி,
அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களிலிருந்து (members of the Commons) தேர்வு செய்யப் படுகிறார்கள். வெகு சிலர் மேலவையான பிரபுக்களவையிலிருந்தும் (British House of Lords) நியமிக்கப் படுகிறார்கள். அமைச்சர்கள் ஆலோசனைக்குழுவுக்கும் சேர்த்தே நியமனம்
செய்யப் படுகிறார்கள். இவர்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரமும் சட்டமியற்றும் அதிகாரமும் உண்டு.
பொதுவாக, மக்களவையின் பெரும்பான்மைக் கட்சியின் தலைவரே பிரதமராகக் கண்டுகொள்ளப் பட்டு மன்னரால் (அரசியால்) அரசாங்கம் அமைக்கும்படி உத்தரவிடப்படுவார். இதற்கு அவருக்கு
மக்களவையின் ஆதரவு இருப்பது அவசியம். தற்போதைய பிரதமர் பிரித்தானிய தொழிற் கட்சியின் தலைவரான டோனி ப்ளேர் ஆவார். 1997ஆம் ஆண்டு முதல் பதவியிலிருந்தார்.
ஐக்கிய இராச்சியத்தின் ஏகாதிபத்தியப் பின்புலத்தின் விளைவாக, பிரித்தானிய அரசமைப்பு உலகெங்கும் பின்பற்றப் படுகிறது. பிரித்தானியப் பாணிப் பாராளுமன்ற முறையைக் கடைப்பிடிக்கும் நாடுகள், வெஸ்ட்மின்ஸ்டர் அரசாட்சி முறையைப் பின்பற்றுவதாகக் கூறப்படுகின்றன.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக