இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித் துள்ளதாவது, வங்கிக் கிளையின் தான் இயங்கி கொடுப் பனவு இயந்திரத்தை உடைத்து அதன் உள்ளே இருந்த பணத்தை கொள்ளையடிப் பதற்கு மூன்று பேர் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் முயற்சி மேற்கொண்டனர்.
முயற்சியின் போது பணம் வைக்கப்பட்டிருந்த இயந்திரத்தை கொள்ளையர்களால் உடைக்க முடியாமல் போனதாகவும் இந்த வங்கிக் கிளையில் கொள்ளையர்கள் கொள் ளை முயற்சியில் ஈடுபட்டிருந்தமை அங்கு பொருத்தப்பட்டிருக்கும் கமரா மூலமாக கொழும்பில் உள்ள தலைமையகத்தினர் அவதானித்து அது குறித்து யாழ்.பிராந்திய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு தக வல் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உடனடியாக விசேட பொலிஸ் குழுவொன்று அங்கு அனுப் பப் பட்டு சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப் பட்டார். பொலிஸாரின் வருகையை அறிந்ததும் கொள்ளையர்கள் மூவரில் இருவர் தப்பி ஓடி விட்டதாகவும் ஒருவர் மாத்திரமே கைது செய் யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்டுள்ளவர் வழங்கிய தகவல்களையடுத்து தப்பியோடிய இருவரை யும் கைது செய்வதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் யாழ்.பிராந்தியத்திற் கான சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் காமினி சில்வா தெரிவித்துள்ளார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக