சனி, 27 நவம்பர், 2010

வட பகுதியில் சிங்கள மக்கள் குடியேறுவதில் தவறென்ன?

கொழும்பில் தமிழ், முஸ்லிம் மக்கள் ஆதிக்கம் செலுத்த முடியுமானால் வடக்கில் சிங்கள மக்கள் குடியேறுவதை தவறு என எப்படிக் கூறமுடியும் என தமிழ்க் கட்சிகளின் அரங்கத்திடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கேள்வியெழுப்பி உள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் தமிழ்க்கட்சிகளின் அரங்கம் ஜனாதிபதியைச் சந்தித்தபோதே ஜனாதிபதி இவ்வாறு கேள்வியயழுப்பியதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில் பங்குபற்றிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் கலாநிதி என்.குமரகுருபரன் தெரிவித்தார். இச்சந்திப்புத் தொடர்பாக மேலும் கூறுகையில்,

வடக்கில் இராணுவக் குடியிருப் புக்கள் அமைக்கப்படுவது குறித்து தமிழ்த் தேசிய விடுதலை முன்னணி யின் செயலாளர் நாயகம் எம்.கே. சிவாஜிலிங்கம் சுட்டிக்காட்டினார். அதற்கு ஆக்ரோஷமாக பதிலளித்த ஜனாதிபதி, கொழும்பில் தமிழ் முஸ்லிம் மக்கள் ஆதிக்கம் செலுத்த முடியும் என்றால் வடக்கில் சிங்கள மக்கள் குடியேறுவதை எப்படித் தவறு எனக் கூறமுடியும் எனக் கேள்வியெழுப்பினார்.அத்துடன் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்ற முடியாது எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஆனால் சிறு குற்றங்களுக்காக சிறைச்சாலைகளிலுள்ள தமிழ்க் கைதிகள் தொடர்பான வழக்குகளை துரிதப்படுத்தி அவர்களின் விரைவான விடுதலைக்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறு சட்டமா அதிபருக்கு தான் உத்தரவிடுவதாக தமிழ்க் கட்சிகளின் அரங்கத்திற்கு ஜனாதிபதி வாக்குறுதி அளித்தார் என்றார்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல