செவ்வாய்க்கிழமையன்று பால்சேனை, வட்டவான், கிருமிச்சை போன்ற கிராமசேவை உத்தியோகத்தர்களுக்கு அவர்களது கையடக்க தொலைபேசிக்கு அநாமதேய தகவலொன்று வழங்கப்பட்டுள்ளது.
இப்பகுதியில் கடந்த 2000 ஆம் ஆண்டு காலப் பகுதியில் காணாமல் போனவர்களை நாங்கள் பாதுகாப்பாக வைத்திருக்கின்றோம். அவர்களை விடுதலை செய்வதற்கான நடவடிக்கைகளை வாழைச்சேனை நீதிமன்றம் ஊடாக மேற்கொள்ளவுள்ளோம். இதற்கு ஒருவருக்கு 25 ஆயிரம் ரூபா வீதம் செலவு ஏற்படும். எனவே அதனை வங்கிக் கணக்கொன்றில் வைப்பிலிட வேண்டும் என்று கூறி ஒரு தனியார் வங்கியின் பெயரினையும் கணக்கிலக்கத்தையும் தொலைபேசி அழைப்பு எடுத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இத் தகவல் பொது மக்கள் சிலருக்கு சென்று சேர்ந்ததினால் அவர்கள் பணத்தையும் இழந்து காணாமல் போனவர்களின் விபரம் அறியாமலும் ஏமாற்றப்பட்டுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக கடந்த புதன் கிழமை விசேட கலந்துரையாடல் ஒன்று வாகரை பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்று விடயம் பொலிஸாரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
விசேட பொலிஸ் குழுவினர் வாகரைக்கு விரைந்து மேலதிக விசாரணைகளை மேற் கொண்டு வருவதாக பொலிஸ் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக