சனி, 27 நவம்பர், 2010

கனடா தமிழருக்கு ஐந்து வருட சிறை

தனது மகளையும் மகளின் காதலனையும் வானால் மோதிக் கொல்ல முயற்சி செய்தமைக்காக 47 வயதான செல்வநாயகம் செல்லத்துரை என்பவருக்கு 5 வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

2007ம் ஆண்டு மே மாதம் கனடா ஸ்காபுறோவில் செல்வநாயகத்தின் பதினாறு வயது மகளான அனிதா செல்வநாயகம் காணாமல் போய்விட்டார். அவரைத் தேடிய அவரது மூத்த சகோதரி ஜெனிதா தனது சகோதரி ஜுன் மாதம் 1ம் திகதி அனிதாவை அவரது காதலனான பதினெட்டு வயதான பிரசன்னாவுடனும் அவரது மைத்துனரான லெனின் சந்திரசிங்கத்துடனும் பேச்மவுன்ற் ஷெப்பட் சந்திக்கு அருகில் கூடியிருந்ததைக் கண்டு தனது தந்தையான செல்வநாயகத்தை தொலைபேசியில் அழைத்து கூறியதனால் சாதிப் பாகுபாடு காரணமாக ஆத்திரம் கொண்ட செல்வநாயகம் அவ்விடத்திற்கு சென்று தனது மினிவானால் மோதி அவர்கள் மூவரையும் கொல்ல முயற்சி செய்துள்ளார்.

மினிவானுக்கு கீழே சிக்கிக் கொண்ட அனிதாவும் அவரது மைத்துனரும் ஐந்து மீற்றர் தூரம் இழுபட்டுச் சென்று மினிவான் இரும்பு வேலியுடன் மோதிநின்றதால் உயிர் பிழைத்துக் கொண்டனர். அனிதாவிற்கு தலையில் காயமேற்பட்டது. மைத்துனரான லெனினிற்கு இடுப்பெலும்பில் உடைவுகள் ஏற்பட்டது.

ஆனாலும் செல்வநாயகம் தனது மகளின் காதலன் பிரசன்னாவை உன்னகை; கொல்லாமல் விடமாட்டேன் என்று கத்தியபடி துரத்திச் சென்றுள்ளார். காலில் முறிவு ஏற்பட்டும் பிரசன்னா அருகில் உள்ள லீகொக் பாடசாலைக்குள் சென்று வீழ்ந்தார். கொலைவெறியில் துரத்திக் கொண்டு சென்ற செல்வநாயகத்தை பாடசாலை ஆசிரியர் தடுத்து பின் பொலிசாரை அழைத்தார்.

சாட்சியங்கள் பலமாக இருந்ததால் படுமோசமான கிரிமினல் நடவடிக்கை என்று கூறிய நீதிபதி செல்வநாயகத்திற்கு ஐந்து வருட சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார். மூன்று வருடங்கள் பிணையில் இருந்த செல்வநாயகம் நவம்பர் 1ம் திகதி சிறையிலிடப்பட்டார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல