சனி, 27 நவம்பர், 2010

நடிகர் ஆர்யாவிற்கு எதிராக ஆர்ப்பாட்டம்!

‘தான் ஒரு மலையாளி என்றும், அதன் காரணமாக பெருமைபடுவதாகவும், தமிழ்நாட்டு மக்களை விட கேரள மக்கள் நல்ல ரசிப்பு தன்மை கொண்டவர்கள் என்றும், தமிழ்நாட்டில் யார் வேண்டுமானாலும் கோடிகளை குவிக்கலாம் என்றும்’ ஆர்யா பேசியதே புயலை கிளப்பியிருக்கிறது.

வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பலர், ‘ஆர்யாவின் இப்பேச்சு தமிழர்களை இழிவுபடுத்துவதாக உள்ளது’ எனக் கூறி அவருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தமிழர்களை இழிவுபடுத்திய ஆர்யாவைக் கைது செய்ய வேண்டும், என்று வழக்கறிஞர்கள் சார்பில் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மலையாளிகள் விழாவில் பங்கேற்ற நடிகர் ஆர்யா, தமிழ் நடிகர்களையும், தமிழர் ரசனையையும் இழிவுபடுத்தும் விதமாக பேசியதாக புகார் எழுந்தது. இதற்கு கண்டனம் தெரிவித்து பெப்சி சங்க தலைவர் வி.சி. குகநாதன் பேசினார்.

இதற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று நடிகர் ஆர்யாவைக் கண்டித்து சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஐகோர்ட்டு வளாகத்தில் உள்ள ஆவின் பாலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு வக்கீல் ராமசிவசங்கர் தலைமை தாங்கினார். அதில் ஐகோர்ட்டு வக்கீல்கள் சிலர் பங்கேற்றனர். அப்போது ஆர்யாவுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

அவர் மீது அவதூறு வழக்கு பதிவு செய்ய வேண்டும். கைது செய்ய வேண்டும் என்பன போன்ற கோஷங்களும் எழுப்பப்பட்டன.

ஆர்யாவிற்கு ஆதரவகா ‘தென்னிந்திய திரைப்பட கலைஞர்கள் சங்கம்’ நிற்க, அவர் பேசியதற்கு விளக்கம் அளிக்கும்படி FEFSI கோரியுள்ளது. இருப்பினும் SIFAA ஆர்யாவிற்கு பலமாக நிற்பதால், FEFSIக்கு விளக்கம் அளிக்கும் எண்ணம் அவருக்கு துளியும் இல்லை என்றே தெரிகிறது. இந்த விவகாரம் தொடர்பாக VC குகநாதனை, நடிகர் சங்கம் நேரடியாகவே சாடியுள்ளது.

ஆர்யா சொன்ன வாசகங்கள் FEFSI மற்றும் SIFAAவிற்கு இடையே மோதலை உண்டாக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல