சனி, 27 நவம்பர், 2010

யாழில் தினசரி பத்திரிகை அலுவலகம் நேற்று இனந்தெரியாதோரால் ஆக்கிரமிப்பு

யாழ்ப்பாணத்திலுள்ள தினக்குரல் தினசரிப் பத்திரிகை அலுவலகம் நேற்று அதிகாலை இனந்தெரியாதோரின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியது.
நேற்று அதிகாலை வான் ஒன்றில் கட்டைகள், கத்திகள், வாள்கள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் வந்திறங்கிய ஆயததாரிகள் இந்த அலுவலகத்தை முற்றுகையிட்டிருந்தனர்.

இது தொடர்பில் நிறுவனத்தினர் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
மாவீரர் தினம் தொடர்பான செய்திகளை பிரசுரிக்கவேண்டாம் என அநாமதேய அமைப்பு ஒன்றினால் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டிருந்ததாகவும் மீறிச் செயற்படும் பத்திரிகை அலுவலகத்தை கொளுத்துவோம் எனவும் அந்த அமைப்பினர் மிரட்டியுள்ளனர். இவர்களின் மிரட்டல் கடிதத்தை குறிப்பிட்ட நாளிதழ் அப்படியே பிரசுத்திருந்தது. இந்நிலையிலேயே அலுவலகம் முற்றுகையிடப்பட்டதாக அறியமுடிகிறது.

இதேவேளை, குடாநாட்டிலிருந்து வெளியாகும் குறிப்பிட்ட மூன்று நாளிதழ்களின் விநியோகப் பிரிவினர் நேற்று முன்தினம் நேற்று அதிகாலையும் வீதிகளில் மறிக்கப்பட்டு, மாவீரர் நாள் தொடர்பான செய்திகளை வெளியிட்டார்களா எனக் கேள்வி எழுப்பியதுடன் அவர்கள் கொண்டு சென்ற நாளிதழ்கள் சோதனையிடப்பட்டதோடு அவர்களும் அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, இச்சம்பவம் இடம்பெற்றதைக் கேள்வியுற்ற அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறிப்பிட்ட பத்திரிகை அலுவலகத்துக்குச் சென்று நிலைமைகளைக் கேட்டறிந்ததுடன் பாதுகாப்பை ஸ்திரப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடியுள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல