சனி, 27 நவம்பர், 2010

புகைப்படக் கருவி முன் தற்கொலை செய்த இளைஞன்

ஜப்பானிய இளைஞர் ஒருவர் இணையத்தள புகைப்படக் கருவி முன் தற்கொலை செய்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மேற்படி 24 வயது இளைஞர் இணையத் தளத்தின் மூலம் ஏனையவர்களுடன் உரையாடியவேளை தான் தற்கொலை செய்யப் போவதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் அவருடன் உரையாடலில் ஈடுபட்டவர்களில் ஒரு சிலர் தற்கொலை செய்யும் எண்ணத்தை கைவிடும்படி அவரைக் கோரிய நிலையில் வேறு சிலரோ அவர் பொய் சொல்வதாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து குறிப்பிட்ட இளைஞர் இணையத்தள புகைப்படக் கருவி முன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இந்த தற்கொலை இணையத்தளத்தில் பார்த்து அதிர்ச்சியடைந்த பார்வையாளர்கள் பொலிஸாருக்கு இது தொடர்பில் அறிவித்தனர்.

வட ஜப்பானிய நகரான சென்டேயிலுள்ள இளைஞனின் வீட்டை முற்றுகையிட்ட பொலிஸார், தூக்கிட்ட நிலையில் இளைஞனின் சடலத்தை மீட்டனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல