சனி, 27 நவம்பர், 2010

இரு பெண்களைக் கொன்ற 19 வயது இளைஞனுக்கு மரணதண்டனை

இரு பெண்களை படுகொலை செய்து நபரொருவரை படுகாயப்படுத்திய குற்றச்சாட்டில் 19 வயது இளைஞன் ஒருவனுக்கு மரணதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்த சம்பவம் வட ஜப்பானில் இடம்பெற்றுள்ளது.

ஜப்பானில் நீதிபதியின் விசாரணையின் கீழ் 20 வயதுக்கு குறைந்த ஒருவருக்கு மரணதண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.

இந்த இளைஞன் கிஷினோமாகிஎனும் இடத்தில் தனது காதலியின் சகோதரியான மிகா நம்பு (20 வயது) மற்றும் அவரது நண்பியான மிகா கோ ஒமோ (18 வயது) ஆகியோரை கத்தியால் குத்தி படுகொலை செய்ததுடன், அவர்களுடன் இருந்த நபரொருவரையையும் மோசமாக தாக்கி காயப்படுத்தியுள்ளார்.

அத்துடன், இந்த இளைஞர் ஏற்கனவே தனது முன்னாள் காதலியை (18 வயது) அடைவதற்காக சிறுமியொருவரைக் கடத்திச் சென்று அவரது இடது காலைக் காயப்படுத்தியுள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல