ஞாயிறு, 12 டிசம்பர், 2010

12வது மாடியில் இருந்து விழுந்த பெண் பிழைத்தார்

சீனாவின் ஷாங்டாங் பகுதியை சேர்ந்த பெண் ஜாவ் ஷி. வயது 26. சிங்கப்பூரில் ஒரு  கேளிக்கை விடுதியில் பணியாற்ற கடந்த மாதம் சிங்கப்பூர் வந்தார். அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தங்க முடிவு செய்தார்.

12வது மாடியில் உள்ள வீட்டின் உரிமையாளருடன் பால்கனியில் நின்று  பேசிக் கொண்டிருந்தார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. பேசிக் கொண்டே பின்னால்  அடியெடுத்து வைத்த ஜாவ் ஷி, பாலன்ஸ் தவறி 12வது மாடியில் இருந்து கீழே விழுந்தார்.

அதிர்ஷ்டவசமாக, அவர் விழுந்த பகுதியில் நீச்சல் குளம் இருந்ததால் உயிர் பிழைத்தார். அதற்குள்  போலீசுக்கு தகவல் போய், நீச்சல் குளத்தில் இருந்து ஜாவ் ஷி வெளியே வந்தபோது போலீஸ் நின்றிருந்தது. தற்கொலைக்கு முயன்றதாக அவரை கைது செய்து ஜாமீனில் விட்டனர். இதுபற்றி ஜாவ் ஷி  கூறுகையில், ‘‘திறந்தவெளி பால்கனியில் இருந்து அடுத்த பால்கனிக்கு இடைவெளி குறைவாக இருக்கவே விபரீதத்தை உணராமல் பின்னால் கால் வைத்தேன். தற்கொலை செய்து கொள்ள நினைத்ததே  இல்லை’’ என்றார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல