ஞாயிறு, 12 டிசம்பர், 2010

ஒபாமா சிறப்பு தூதர் கவலைக்கிடம்

அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா சார்பாக ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு சிறப்பு தூதராக நியமிக்கப்பட்டிருப்பவர், ரிச்சர்டு ஹால்புரூக்கி (வயது 69). தூதரக நடவடிக்கைகளில் நீண்ட அனுபவம் வாய்ந்த இவர், 1995-ம் ஆண்டு பால்கான்ஸ் போரை முடிவுக்கு கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றினார். எனவே, ஆப்கானிஸ்தானுக்கு இவரை ஒபாமா நியமித்துள்ளார்.

இந்த நிலையில், ரிச்சர்டின் இதயப்பகுதியில் உள்ள தமனி குழாயில் விரிசல் ஏற்பட்டதால் அமெரிக்காவில் உள்ள பால்டிமோர் நகர மருத்துவமனையில் நேற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், அவருடைய உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை. அவர் தொடர்ந்து கவலைக்கிடமான நிலையிலேயே இருந்து வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல