இலங்கை அரசியல் விவகாரம் தொடர்பில் விக்கிலீக்ஸ் இணையத்தளத்தால் வெளியிடப்பட்ட ஆவணங்கள் கொழும்புக்கும், வாஷிங்டனுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளில் ஒரு முறுகல் நிலையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்களில் இலங்கை அரசியல் விவகாரம் தொடர்பில் நான்கு வகையான தகவல்கள் உள்ளடங்கி யிருந்தன.
வன்னியில் கடந்த வருடம் இடம்பெற்ற போரின்போது மேற்கொள்ளப்பட்டதாக கூறப் படும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான அமெரிக்காவின் அபிப்பிராயங்கள், இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பற்றிசீயா புட்னீஸுடன் தமிழ் அரசியல் தலைவர்கள் நடத்திய பேச்சுக்கள் தொடர்பான தகவல்கள், பாகிஸ் தானை பிரதான தளமாக கொண்டியங்கும் லக்ஷ்கர் ஈ தொய்பா அமைப்பின் பயிற்சி முகாம்கள் இலங்கையில் செயற்பட்டு வருவதாக அமெரிக்கத் தூதுவர் அனுப்பி வைத்த தகவல்கள், அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போது 2009 ஆம் ஆண்டின் முற்பகுதியில் அரசாங்கம் வடகொரியாவிடம் இருந்து பெருமளவு ரொக்கெட் லோஞ்சர்களை கொள்வனவு செய்தது என்ற தகவலும் இந்த ஆவணங்களில் உள்ளடக்கப் பட்டிருந்தது.
இந் நான்கு தகவல்களும் சர்வதேச சமூகத்திடம் இருந்து அரசாங்கத்தை தனிமைப் படுத்துவதற்கான வாய்ப்புக்களை மேலும் அதிகரித்துள்ளதாக கொழும்பு அரசியல் வட் டாரங்கள் தெரிவிக்கின்றன.இனிவரும் காலங்களில் இலங்கை விவ காரம் தொடர்பில் விக்கிலீக்ஸ் இணையத் தளம் வெளியிடவுள்ள ஆவணங்கள் மேலும் அதிர்ச்சிக்கரமான தகவல்களை கொண்டி ருக்கலாம் என இராஜதந்திர வட்டாரங்கள் எதிர்பார்ப்பதாகவும் இவ் வட்டாரங்கள் சுட்டிக் காட்டுகின்றன.
இலங்கைக்கான அமெரிக்காவின் முன் னாள் தூதராக இருந்த ரொபர்ட் ஓ பிளேக் இலங்கை விவகாரம் தொடர்பில் பல சர்ச் சைக்குரிய விடயங்களை கையாண்டவர். இந் நிலையில் அவரது காலத்தில் அனுப்பிவைக் கப்பட்ட தகவல்கள் இன்னும் சர்ச்சைக்குரிய தாக இருக்கும் என இராஜதந்திர வட்டாரங் களால் எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளை சர்வதேச சமூகத்தால் ஒதுக் கப்பட்ட வடகொரியாவிடம் இருந்து இலங்கை அரசாங்கம் ஆயுதங்களை கொள்வனவு செய்தது என்ற விக்கிலீக்ஸ் வெளியிட்ட தக வல் அந் நாட்டின் மீது சர்வதேச சந்தேகத்தை மேலும் அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. அதனால்தான் இவ் விடயம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உடனடியாக மறுப்புத் தெரிவித்ததாகவும் கொழும்பு அரசியல் வட்டா ரங்கள் தெரிவிக்கின்றன.



கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக