ஞாயிறு, 12 டிசம்பர், 2010

வீல்சேரில் வந்து திருடியவருக்கு 21 ஆண்டு சிறை (படம் இணைப்பு)

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்தவர் பீட்டர் லாரன்ஸ். வயது 71.  உடல்நலக் குறைவால் சக்கர நாற்காலியில் வாழ்க்கையை கழிப்பவர். ஆதரவற்ற இவர், சமீபத்தில்  அங்குள்ள வங்கி ஒன்றில் வீல்சேருடன் வேகமாக புகுந்தார். அசல் துப்பாக்கியை போன்றிருந்த  பொம்மை துப்பாக்கியை காட்டி மிரட்டினார். $2,000 கொள்ளை அடித்தார்.

பிறகு வெளியேறும்  போது, பொம்மை துப்பாக்கி சங்கதி தெரிய வந்து மாட்டிக் கொண்டார். போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.

அவர் மீது தொடரப்பட்ட வழக்கில், பீட்டர் லாரன்சுக்கு 21 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி  தீர்ப்பளித்தார். எனினும், 90 வயதை அடைந்ததும் அவரால் பொதுமக்களுக்கு தீங்கு ஏற்பட வாய்ப்பி ல்லை என்பதால் 90 வயதில் விடுதலை ஆகலாம் என்று தெரிவித்தார்.

அதன்படி, பீட்டர் லாரன்ஸ் 19  ஆண்டு சிறையில் இருக்க வேண்டியிருக்கும். அவரது வழக்கறிஞர் கூறுகையில், ‘‘பீட்டர் யாரையும்  துன்புறுத்தவில்லை. ஆதரவற்ற நிலையில் வீதிகளில் அலைய விரும்பாமல், சிறை செல்வதற்காகவே  இந்த குற்றத்தில் அவர் ஈடுபட்டார்’’ என்றார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல