ஞாயிறு, 12 டிசம்பர், 2010

நீண்ட நேரம் சைக்கிள் ஓட்டினால் ஆண்மை குறையலாம்

‘வாரத்தில் 5 மணி நேரத்துக்கு மேல் சைக்கிள் ஓட்டினால் ஆண்களின் விந்து வீரிய சக்தி  குறையும் அபாயம் உள்ளது’ என்று அமெரிக்க ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அமெரிக்காவின் பாஸ்டன்  பல்கலைக்கழக பேராசிரியர் லாரன் வைஸ் தலைமையிலான குழுவினர் இதுபற்றி விரிவாக ஆய்வு நட த்தினர். விந்தில் உயிரணு குறைவுக்காக சிகிச்சை எடுத்துக் கொள்ளும் 2,200 பேர் இதில் பங்கேற்றனர்.  அவர்களில் உடற்பயிற்சி செய்யும் வழக்கம் கொண்டவர்களைவிட வாரத்துக்கு 5 மணி நேரத்துக்கு  மேல் சைக்கிள் ஓட்டும் வழக்கம் கொண்டவர்களின் விந்தில் உயிரணுக்கள் குறைவாக இருந்தது தெரிய  வந்தது.

உடல் எடை, ரத்த அழுத்தம், அணியும் உள்ளாடை மற்றும் சில அம்சங்களின் அடிப்படையில்  ஆராய்ந்ததில் உடற்பயிற்சி செய்பவர்களின் வீரிய சக்திக்கு எந்த பாதிப்பும் இல்லாதது உறுதியானது.

ஆனால், அதிக அளவில் சைக்கிள் ஓட்டுவோருக்கு விந்தில் வீரிய சக்தி குறைவது கண்டுபிடிக்கப்பட் டது. சைக்கிள் அதிக நேரம் ஓட்டுபவர்களின் விதைப் பைகளில் ஏற்படும் வெப்பநிலை அதிகரிப்பு,  காயம் படுதல் ஆகியவை இதற்கு காரணம் என்று லாரன் வைஸ் தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக குறிப்பாக தகவல் தொழில்நுட்பம் போன்ற துறைகளில்  பணிபுரிபவர்களுக்கு குழந்தையில்லாத பிரச்னை சவாலாக இருந்து வருகிறது. இதற்கு டென்ஷன் ஒரு  காரணமாக கூறப்பட்டது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல