ஞாயிறு, 12 டிசம்பர், 2010

ஐ.நா செயலாளராக கோஃபி அனான் தெரிவு செய்யப்பட்ட நாள்

கோபி அனான் கானாவைச் சேர்ந்தவர். ஐக்கிய நாடுகள் சபையின் ஏழாவது செயலாளர் நாயகம் ஆவார். 1996 இல் இப்பதவிக்குத் தெரிவுசெய்யப்பட்ட கோபி அன்னான் ஜனவரி 1, 1997 முதல் பதவி வகிக்கிறார். ஜனவரி 1, 2007 இல் ஓய்வு பெறுகிறார். இவரது இரட்டைச் சகோதரி 1991 இல் உயிரிழந்தார்.

ஐக்கிய நாடுகள், அல்லது ஐநா அல்லது யூஎன், என்பது, நாடுகளைக் கொண்ட ஒரு பன்னாட்டு அமைப்பு. கிட்டத்தட்ட உலகின் அனைத்து நாடுகளும் இதில் உறுப்பினராக இருக்கின்றன. இது, வாஷிங்டனில் நடைபெற்ற டம்பார்ட்டன் ஓக்ஸ் மகாநாட்டைத் தொடர்ந்து அக்டோபர் 24, 1945ல், கலிபோர்னியாவிலுள்ள, சான் பிரான்சிஸ்கோவில் தொடங்கப்பட்டது.

எனினும், 51 நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்திய முதலாவது பொதுச்சபை, ஜனவரி 10 1946 இல், இலண்டனிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நகரின் மெதடிஸ்த மத்திய மண்டபத்தில் கூடியது. 1919 இலிருந்து 1946 வரை, இதற்கு முன்னோடியாகக் கொள்ளக்கூடிய, இதையொத்த தேசங்களின் அணி (League of Nations) என்னும் அமைப்பு இருந்து வந்தது. ஐநா அங்கத்தினர் தகுதி, ஐநா சாசனத்தில் உள்ள நிபந்தனைகளை ஏற்று, அந்நிபந்தனைகளை செயல்படுத்த முடியும் என ஐநாவினால் நம்பத்தகுந்த எல்லா சமாதான விரும்பி நாடுகளுக்கும் உண்டு. பாதுகாப்புச் சபையின் பரிந்துரைப்படி, பொதுச்சபை அனுமதி பற்றித் தீர்மானம் எடுக்கிறது. செப்டெம்பர் 2003 நிலைவரப்படி, 191 உறுப்புநாடுகள் உள்ளன. ஐக்கிய நாடுகள் சபை உறுப்பு நாடுகள் பார்க்கவும்.

ஐக்கிய நாடுகள் முறைமை 5 முக்கிய அமைப்புகளைக் கொண்டது:

* ஐக்கிய நாடுகள் பொதுச் சபை
* ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபை
* ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக சபை
* ஐக்கிய நாடுகள் நம்பிக்கைப் பொறுப்புச் சபை
* ஐக்கிய நாடுகள் செயலகம்
* அனைத்துலக நீதிமன்றம்

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல