ஆனால், தமிழர்களினால் தலைநகரில் அனுபவிக்கக்கூடியதாக இருக்கும் அந்த உரிமையையும் வசதியையும் குந்தகத்துக்குள்ளாக்கக் கூடிய வகையிலான விசமத்தனமான செயல்களில் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த சில விவாகப் பதிவாளர்கள் ஈடுபட்டிருப்பதாக மக்கள் தினக்குரலின் கவனத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார்கள். கொழும்பில் தமிழ் மக்கள் அதிகளவில் வசிக்கும் ஒரு பகுதியில் விவாகப் பதிவாளராகப் பணியாற்றும் யாழ்ப்பாணக் குடாநாட்டைச் சேர்ந்த பெண்மணியின் செயற்பாடுகளுக்குக் கெடுதி விளைவிக்கும் நோக்குடன் பெரும்பான்மையினத்தைச் சேர்ந்த விவாகப் பதிவாளர் விசமத்தனமான பிரசாரங்களில் ஈடுபடுவதாக முறைப்பாடுகள் கிடைத்திருக்கின்றன. அவரின் இந்தச் செயலுக்கு தமிழர்கள் சிலரும் ஒத்தாசையாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
தமிழில் விவாகப் பதிவைச் செய்தால் வெளிநாட்டுத் தூதரகங்களில் விசாவைப் பெறுவதில் சிரமங்கள் ஏற்படுமென்றும் கொழும்பில் அரசாங்க அலுவலகங்களிலும் அலுவல்களைச் செய்து கொள்வதில் பெரும் கஷ்டங்களை எதிர்நோக்க வேண்டியிருக்குமென்றும் இந்தப் பிரகிருதிகள் தமிழர்கள் மத்தியில் கதைகளை அவிழ்த்துவிட்டிருக்கிறார்கள் என்று தெரியவருகிறது. தொழிற் போட்டி காரணமாகச் செய்யப்படுவதாகக் கூறப்படும் இந்த விசமத்தனமான கைங்கரியத்துக்கு எடுபடாமல் தமிழ் மக்கள் தங்கள் மத்தியிலான விவாகங்களை தமிழிலேயே பதிவு செய்து கொள்ள வேண்டுமென்று அக்கறையுடைவர்கள் வலியுறுத்துகிறார்கள்.
விசமத்தனமான பிரசாரங்களில் கூறப்படுவதைப் போன்று தமிழில் விவாகப் பதிவுகளைச் செய்து கொண்டால் எந்தவிதமான சிரமமும் வெளிநாட்டுத் தூதரங்களிலோ, அரசாங்க அலுவலகங்களிலோ ஏற்படப் போவதில்லை என்பதை தலைநகர் வாழ் தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்று அந்த அக்கறையுடையவர்கள் கூறுகிறார்கள்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக