ஞாயிறு, 12 டிசம்பர், 2010

பிரிட்டனுக்கு செல்லும் அரச தலைவர்கள் எதிர்நோக்கக் கூடிய நெருக்கடியான சட்டங்கள் நீக்கப்படவுள்ளதாக செய்தி

பிரிட்டனுக்கு செல்லும் அரச தலைவர்கள் எதிர்நோக்கக் கூடிய நெருக்கடியான சட்டங்கள் நீக்கப்படவுள்ளதாக லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

பிரிட்டனுக்க வெளியே மேற்கொள்ளப்படும் யுத்தக் குற்றச் செயல் குற்றச்சாட்டின் பேரில் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கு எதிராக வழக்குத் தொடரக் கூடிய சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் மே மாதத்திற்குள் இந்த சட்டம் நீக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

இஸ்ரேல், இந்தோனேஷியா போன்ற நாடுகளைச் சேர்ந்த தலைவர்களை யுத்தக் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்வதற்கு பிரிட்டனைச் சேர்ந்த சில தப்பினர் முயற்சி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக குறித்த நாடுளுக்கும் பிரிட்டனுக்கும் இடையில் இராஜதந்திர முறுகல் நிலைமை ஏற்படக் கூடிய அபாயம் ஏற்பட்டதாகவும், இதனால் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

புதிய சட்டமூலமொன்றை அமுல்படுத்துவதற்காக வரைவுத் திட்டம் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் பிடிவிராந்து ஒன்றைப் பெற்றக் கொள்வதற்கு முன்னர் பிரிட்டன் குற்றவியல் சட்டப் பணிப்பாளர் நாயகத்திடம் அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டுமென புதிய சட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இளவரசர் வில்லியம்ஸின் திருமண நிகழ்விற்கு உலக நாடுகளின் தலைவர்கள் விஜயம் செய்ய இருப்பதனால் அதற்கு முன்னர் இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படவுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல