வியாழன், 20 ஜனவரி, 2011

“பேஸ்புக்' இணையத்தளத்தில் அறிகமான 13 வயது சிறுமியை படுகொலை செய்த சிறுவன்

“பேஸ்புக்' இணையத்தளத்தின் மூலம் அறிகமான 13 வயது சிறுமியை 14 வயது சிறுவன் ஒருவன் படுகொலை செய்த சம்பவம் லித்துவேனியாவில் இடம்பெற்றுள்ளது.

தலைநகர் வில்னியுஸுக்கு மேற்படி சிறுமியை ஆசை காட்டி வரவழைத்த சிறுவன் அச்சிறுமியை படுகொலை செய்துள்ளான்.

சிறுமியின் அரை நிர்வாண சடலம் வில்னியுஸ் நகருக்கு வெளியிலுள்ள பஸ் நிலைய மொன்றில் திங்கட்கிழமை இரவு கண்டெடுக்கப்பட்டது.

சிறுவன் மேற்படி சிறுமியை தானே படுகொலை செய்ததாக ஒப்புக்கொண்டுள்ளான்.

இந்நிலையில் அவனுக்கு ஆகக் கூடியது 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என பிராந்திய பெண் பொலிஸ் உத்தியோகத்தரான டாலியா பெட்ராயுகியனி தெரிவித்தார். பராயமடையாதவர்கள் என்பதால் சிறுவனதும் சிறுமியதும் பெயர், விபரங்கள் வெளியிடப்படவில்லை.
லிதுவேனியாவில் 3.4 மில்லியன் மக்கள் தொகையில் சுமார் 710,000 பேர் “பேஸ்புக்' இணையத்தள பாவனையாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

2004 ஆம் ஆண்டு ஸ்தாபிக் கப்பட்டதிலிருந்து “பேஸ்புக்' இணையத்தளம் உலகமெங்கு மிருந்து 600 மில்லியன் பயனாளர்களை தன்பால் கவர்ந்துள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல