பிறந்த நாளுக்கு தனது தந்தையால் வழங்கப்பட்ட துப்பாக்கியைப் பயன்படுத்தி அவரையும் அத்தை ஒருவரையும் சுட்டுக் கொன்ற 14 வயது சிறுவனொருவன் கைது செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்க தென் கரோலினா மாநிலத்திலுள்ள ஸ்பார்டான்பேர்க்கில் இடம்பெற்றுள்ளது.
தனது தந்தையான ஜோ லங்போர்ட் (44 வயது), பெரிய அத்தையான விர்ஜினியா காஸ்டன் (83 வயது) மற்றும் தனது பாட்டியான ரேசல் லங்போர்ட் (80 வயது) ஆகியோரை துப்பாக்கியால் சுட்ட சிறுவன், உடனடியாக பொலிஸாருடன் தொடர்பையேற்படுத்தி தனது படுகொலைகள் தொடர்பாக தெரிவித் துள்ளான்.
இதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
சிறுவன் பொலிஸாரிடம் துப்பாக்கியை ஒப்படைத்து சரணடைந்துள்ளான்.
துப்பாக்கிச் சூட்டுக்கு ஆளானவரும் படுக்கையில் வைத்தே சுடப்பட்டுள்ளனர். திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பான செய்திகள் புதன்கிழமை அமெரிக்க ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
சிறுவனது தந்தையும் அத்தையும் உயிரிழந்த நிலையில் காணப்பட்ட அதே சமயம் உயிருக்காக போராடிக் கொண்டிருந்த பாட்டி உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தந்தையின் வாயினூடாக துப்பாக்கிப்பிரயோகம் செய்து அவரைப் படுகொலை செய்த சிறுவன், அத்தையின் தலையிலும் பாட்டியின் முகத்திலும் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளான்.
இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திய காரணம் குறித்து சிறுவனிடம் பொலிஸார் விசாரித்தபோது, ““எனக்குத் தெரியாது'' என அவன் அமைதியாக பதிலளித்துள்ளான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக