வியாழன், 20 ஜனவரி, 2011

விவசாயி கண்டுபிடித்த மின்சார காலணி

சீனாவை சேர்ந்த விவசாயி ஜாவோ ஷூகின். இவர் மின்சார காலணி ஒன்றை கண்டுபிடித்து இருக்கிறார். இந்த காலணியை அணிந்து இருப்பவர் மணிக்கு 160கி.மீ தூரம் ஓட முடியும். இது பேட்டரியால் இயங்கக்கூடியது. இதில் இன்டிகேட்டர்கள், ஹெட்லைட்டு, பிரேக், பிரேக் லைட்டு ஆகியவை உள்ளன. இந்த ஷூவை அணிந்து இருப்பவர் கைப்பிடியில் உள்ள பட்டனை அழுத்தினால் போதும் மணிக்கு 24கி.மீ. வேகத்தில் அவர் ஓடத்தொடங்குவார்.

தன் கண்டுபிடிப்பு பற்றி அவர் கூறுகையில், கிராமத்து சிறுவர்களுக்காக தான் இந்த காலணியை நான் உருவாக்கினேன். அவர்கள் தான் பள்ளிக்கூடத்துக்கு செல்வதற்கு பல கி.மீ. தூரம் நடக்க வேண்டி இருக்கும். என் கிராமம் மலைப்பகுதியில் உள்ளது. அருகில் உள்ள பள்ளிக்கூடத்துக்கு செல்வதற்கே 20கி.மீ. தூரம் நடக்க வேண்டும். அதனால் குழந்தைகள் அதிகாலை 3 மணிக்கு எழுந்து வேலைகளை முடித்து விட்டு 3 முதல் 4 மணி நேரம் நடந்தால் தான் பள்ளிக்கூடத்தை அடைய முடியும் என்கிறார். இந்த காலணி தொடர்ந்து 3 மணி நேரத்துக்கு இயங்கக்கூடியது. நீண்ட தொலைவு செல்வதற்கு தனியாக பேட்டரியையும் எடுத்துச்செல்ல வேண்டும் என்றும் அவர் சொல்கிறார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல