வனத்தில் கொள்ளையடித்துக்கொண்டிருந்த வால்மீகி, ராமாயணத்தை படைத்தது போல, சீனாவைச் சேர்ந்த பயங்கர கொள்ளைக்காரன் ஒருவன் தான் செய்த குற்றங்களுக்கு பிராயச்சித்தம் செய்யும் வகையில் கொள்ளையடிப்பதை தடுக்கும் அதிநவீன பூட்டு ஒன்றை தயாரித்து உள்ளானாம்.
யாங் குயிகுவா என்ற 29 வயது ஆசாமி பலமுறை திருட்டு குற்றங்களுக்காக சிறைக்கு சென்றுள்ளான். தற்போது திருந்தி வாழும் குயிகுவா கைரேகையை பதிவு செய்தால் மட்டுமே திறக்கும் தன்மை வாய்ந்த நவீன பூட்டை ஒன்றை வடிவமைத்துள்ளாராம்.
தெரியாதவர்கள் என்ன பாடு பட்டாலும் பூட்டை உடைக்க முடியாத அளவுக்கு வலுவானதாக உருவாக்கி உள்ளானாம். இந்த பூட்டுக்கு சாவிகள் எதுவும் கிடையாது. ஒருமுறை பதிவு செய்தவர்கள் மட்டுமே பூட்டை திறக்க முடியும். யார் பூட்டை திறந்தார்கள் என்பது சென்சார் மூலம் தெளிவாக கொள்ளலாமாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக