டுனீசியாவிலிருந்து பதவி விலகிய ஜனாதிபதி பென் அலி 1.5 தொன் எடையுடைய தங்கத்துடன் நாட்டிலிருந்து வெளியேறியுள்ளதாக பிரெஞ்சு புலனாய்வுத் துறை தெரிவித்துள்ளதாக பிரான்ஸின் லா மொன்டே பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
நாட்டின் சொத்துக்களை சுரண்டியதாக குற்றம் சுமத்தப்பட்ட பென் அலிக்கு எதிரான பாரிய ஆர்ப்பாட்டங் களையடுத்து அவர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது குடும்பத்தினருடன் சவூதி அரேபியாவுக்கு விமானத்தில் தப்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.
23 வருடங்களாக ஆட்சியிலிருந்த பென் அலி நாட்டிலிருந்து வெளியேறும் போது 1.5 கிலோகிராம் தங்கத்துடன் தப்பிச் சென்றதாகவும் கடந்த வாரம் பென்அலியின் இரண்டாவது மனைவி லைலா ட்ராபெல்ஷி, டுனீசிய மத்திய வங்கியிலிருந்து தங்கப் பாளங்களை மீளப் பெற்றதாகவும் பிரெஞ்சு புலனாய்வுத் துறையினர் பிரெஞ்சு ஜனாதிபதி நிகலஸ் சார்கோஸிக்கு தெரிவித்துள்ளனர்.
மத்திய வங்கி ஆளுநர் ஆரம்பத்தில் இதற்கு மறுத்த நிலையில் ஜனாதிபதி பென் அலி தலையிட்டதையடுத்து அவரின் அழுத்தத்திற்குப் பணிந்ததாகவும் பென் அலி கூறியுள்ளார்.
இத் தங்கத்தின் பெறுமதி சுமார் 6.5 கோடி அமெரிக்க டொலர்கள் (சுமார் 720 கோடி ரூபா) ஆகும்.
பென் பிரான்ஸ¤க்கு செல்வதற்காகவே விமானத்தில் புறப்பட்டதாகவும் ஆனால் அவரை ஏற்றுக்கொள்ள பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கலஸ் சார்கோஸி மறுத்ததையடுத்து சவூதி அரேபியாவிக்கு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை பிரான்ஸிலுள்ள பென் அலியின் சொத்துக்களை முடக்க கோரி, வழக்குத் தொடுக்கப் போவதாக அந்நாட்டைச் சேர்ந்த மனித உரிமை அமைப்பான ஷேர்பாவும் ட்ரான்பரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பின் பிரெஞ்சு கிளையும் அறிவித்துள்ளன.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக