திங்கள், 10 ஜனவரி, 2011

3 வருட காலமாக இருண்ட அறையில் பாட்டியை அடைத்து வைத்த பேத்தி

தனது பாட்டியின் நலன்புரி பணத்தை களவாடும் முகமாக , அவரை 3 வருட காலமாக இருண்ட அறையொன்றில் அடைத்து வைத்த பெண் பொறியியிலாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஜேர்மனியில் இடம்பெற்றுள்ளது.

எல்ஸா கோனிக் (96 வயது) என்ற மேற்படி மூதாட்டியின் அழுகைக் குரலைக் கேட்ட அயலவர்கள் பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்தே, லெயிப்ஸிக் நகரிலுள்ள மாடிக் குடியிருப்பிலுள்ள இருண்ட அறையிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டார்.

எனினும் உடல் தளர்ந்து மனம் பாதிக்கப்பட்டிருந்த எல்ஸா, விடு ிக்கப்பட்டு சிறிது நேரத்திலேயே உயிழந்துள்ளார்.

எல்ஸாவின் பேத்தியும் தகுதி வாய்ந்த பொறியியலாளருமõன ஐஸ் எடெல்மான் (49 வயது), எல்ஸாவை அறையொன்றில் அடைத்து அந்த அறையின் ஜன்னல்களை மெல்லிய உலோகத் தகட்டால் மறைத்துள்ளார். இதனால் அறை முழுவதும் கும்மிருட்டாக இருந்துள்ளது.

அந்த அறையில் மலசலகூட வசதி ஏற்படுத்தப்பட்டிருந்தபோதும், மின்சார வசதியோ அன்றி ஒளியைப் பெறுவதற்கான ஏனைய வசதியோ இருக்கவில்லை.

பாட்டியை அறைக்குள் அடைத்து வைத்த ஐஸ், தனது பாட்டிக்கு மாதாந்தம் வழங்கப்பட்டு வந்த 600 யூரோ பெறுமதியான நலன்புரி பணத்தை தானே அபகரித்து வந்துள்ளார்.

2001 ஆம் ஆண்டில் எல்ஸாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டபோது, அவர் ஐஸை தனது சட்டபூர்வ பாதுகாவலராக நியமித்திருந்தார்.

இந்நிலையில் 2006 ஆம் ஆண்டு மலிவான மாடிக்குடியிருப்பு வீடொன்றை மாதாந்தம் 130 ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான வாடகைக்கு எடுத்த ஐஸ், அங்கு தனது பாட்டியை அறையொன்றில் சிறைவைத்துள்ளார்.

தனது பாட்டியின் பராமரிப்பு செலவுக்கு வழங்கப்பட்ட பணத்தை அபகத்த ஐஸ், அவருக்கு உணவை மட்டுமே வழங்கி வந்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணை இம்மாத இறுதியில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐஸ் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படும் பட்சத்தில் அவர் 5 வருடத்திற்கு மேற்பட்ட சிறைத் தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல