திங்கள், 10 ஜனவரி, 2011

இப்படியும் ஒரு நேத்தி

ஆந்திராவிலிருந்து சபரிமலைக்கு வீதி வழியாக 1,500 கி.மீ , ஸ்கேட்டிங்கில் வருவதென்பது சாதாரண காரியம் இல்லையே. ஆந்திரா ஐதராபாத் அருகே மாலை அணிந்த கன்னிச்சாமி ரகுவீர் (25), டிச.,22ல் சபரிமலைக்கு புறப்பட்டார்.

கடுமையான விரதம் இருந்து வழக்கம்போல பஸ்சில் வராமல் ரோலர் ஸ்கேட்டிங் மூலம் செல்ல தயாரானார். முதன் முறையாக வருவதால் வழிகாட்டியாக குருசாமி சுரேஷ் (30) சைக்கிளில் வருவதற்கு ஒப்புக்கொள்ள பயணத்தை தொடர்ந்தனர்.

மெகபூப்நகர், கர்னூல், அனந்தாபூர், பெங்களூரு, ஓசூர், சேலம், கரூர், திண்டுக்கல் வழியாக நேற்று முன்தினம் பகல் 2க்கு சரணம் ஐயப்பா கோஷத்துடன் வத்தலக்குண்டை அடைந்தனர்.

பயணம் குறித்து ரகுவீர் கூறும்போது, மாணவர்களுக்கு நடனம், கராத்தே கற்றுத் தருகிறேன். முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவிடம் 700 கி.மீ., ஆந்திராவுக்குள் ஸ்கேட்டிங்கில் சுற்றி விருது வாங்கினேன்.

எனக்கு பிடித்த, ஐயப்பனை தரிசிக்க ஸ்கேட்டிங்கில் செல்ல வேண்டும் என்பது எனது நீண்ட நாள் ஆசை. அதனால் வந்தேன். இவ்வளவு தூரம் இதுவரை யாரும் ஸ்கேட்டிங்கில் வரவில்லை. கின்னஸ் சாதனைக்கு முயற்சி எடுத்து வருகிறேன் என்றார்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல