வட பாரிஸ் டி சலாயிஸ் பிராந்தியத்தில் லொய்ஸன் சோயஸ் லென்ஸ் நகரிலுள்ள வீட்டில் மேற்படி சிறுவனும் அவனது தாயாரான எமிலி டிக்றொயிக்ஸும் (28 வயது) வசித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் எமிலி, மூளையின் இரத்தக் குழாயில் ஏற்பட்ட வெடிப்பால் திடீரென உயிழந்துள்ளார். அவரது மரணம் கடந்த நத்தார் தினத்திற்கு முன் இடம் பெற்றிருக்கலாம் என நம்பப்படுகிறது.
நத்தார் தினத்தன்று எமிலியின் தந்தை மகளுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியபோது மறு முனையில் தொலைபேசியில் பதிலளித்த சிறுவன், தனது தாய் ஆழ்ந்து உறங்குவதாக தெரிவித்துள்ளான்.
அதன் பின் அவர் புதுவருட தினத்தன்றும் மகளை தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் முயற்சி தோல்வியடைந்ததால் மகளை நேரில் சென்று பார்க்க முடிவு செய்தார் மகளின் வீட்டையடைந்த அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அங்கு எமிலியின் துர்நாற்றம் வீசும் சடலத்திற்கு அருகே 3 வயது பாலகன் அமைதியாக அமர்ந்திருந்தான்.
சட்டக் காரணங்களுக்காக சிறுவனது பெயர் வெளியிடப்படவில்லை.
அதேசமயம் தாய் இறந்த பின் 3 வயது சிறுவன் எதை உண்டு உயிர் வாழ்ந்தான் என்பதும் இதுவரை அறியப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக