திங்கள், 10 ஜனவரி, 2011

ஒரு எலியைப் பிடிக்க அறுபது எலிப் பொறிகள் வைத்து தேடும் அமெரிக்கா

கதிர்வீச்சுத் தாக்கத்துக்குள்ளான ஒரு எலியைப் பிடிக்க அறுபது எலிப் பொறிகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த அதிசயம் வேறு எங்குமல்ல உலக மகா வல்லரசு நாடான அமெரிக்காவில்தான்.

அமெரிக்காவில் உள்ள அணு உலை ஒன்றில் தான் இந்த எலி காணப்படுகின்றது.

அறுபது பொறிகளை வத்தும் கூட இன்னும் அது சிக்கவில்லை. இந்த மாத முற் பகுதியில் வாஷிங்டனில் ஹன்பர்ட் அணு உலையில் கதிர் வீச்சுத் தாக்கத்துக்குள்ளான முயல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அங்கு ஒரு எலியும் கதிர்வீச்சுத் தாக்கத்துக்கு ஆளாகி இருப்பது தெரியவந்துள்ளது. முயலின் உடலில் இருந்து வெளியேறியிருந்த கழிவுகளைக் கண்டு அதைச் சோதித்துப் பார்த்தபோது அது கதிர்வீச்சுத் தாக்கத்துக்காளான விடயம் தெரியவந்தது.

அதேபோல் தான் எலியின் கழிவுகளையும் கண்டு அதையும் சோதித்துப் பார்த்தபோது அதுவும் கதிர் வீச்சின் தாக்கத்துக்கு ஆளாகியிருக்கின்றமை தெரியவந்துள்ளது. இந்தப் பிராணிகள் எப்படி இந்தத் தாக்குதலுக்கு ஆளாகின என்பது தெரியவில்லை.

ஆனால் இவை இரண்டுமே அணு உலைக்குள் உள்ள கதிர்வீச்சு கலந்த எதையாவது சாப்பிட்டிருக்கலாம் அல்லது குடித்திருக்கலாம் என்று நம்பப்படுகின்றது. அல்லது முயலின் கழிவுகள் எலியின் உடம்பில் பட்டிருக்கலாமா என்றும் நம்பப்படுகின்றது.

ஆனால் இந்த அணு உலைக்கு வெளியே பொதுமக்கள் நடமாட்டம் உள்ள எந்தப்பகுதியிலிருந்தும் இதுவரை எவ்விதமான கதிர்வீச்சுத் தாக்கம் கொண்ட பொருள்களும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று அதிகாரிகள் ஊர்ஜிதம் செய்துள்ளனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல