திங்கள், 10 ஜனவரி, 2011

மனைவியரால் கணவர்களுக்கு வந்த ஆபத்து

பொலிஸ் துறையில் பணியாற்றும் தங்கள் கணவர்களின் அலுவலக உடைகளை அணிந்து ஆபாசமாகப் புகைப்படம் எடுத்தது மட்டுமல்லாமல் அதனை பேஸ்புக்கில் அவர்களின் மனைவியர் தரவேற்றம் செய்துள்ளனர். அக்குற்றச்சாட்டுக்காக கணவர்களைப் பதவியிலிருந்து நீக்கியுள்ள சம்பவம் ரோமானியாவில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி பொலிஸாரின் மனைவிகள் தங்கள் கணவர்களின் சீருடைகளை அணிந்தவாரு கொன்ஸ்டண்டா நகரில் உள்ள பொலிஸ் தலமையகத்தில் இடம்பெற்ற புதுவருட நிகழ்வொன்றில் கலந்துகொண்டுள்ளனர்.

இவர்கள் தங்களது உள்ளாடைகள் தெரியும் வண்ணமும்இ துப்பாக்கியுடனும் புகைப்படங்களில் காணப்படுகின்றனர்.

இவர்களின் கணவன்மார்கள் இப்புகைப்படத்தினை பேஸ்புக்கில் தரவேற்றியுள்ளனர்.

இச்சம்பவமானது மேலதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து அப்பொலிஸார் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

சர்ச்சையை தோற்றுவித்துள்ள இப்புகைப்படங்களானது பேஸ்புக் இணையத்தளத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல