திங்கள், 10 ஜனவரி, 2011

அமெரிக்காவில் மாணவனுடன் பாலியல் உறவு பேணிய ஆசிரியை கைது

தனது மாணவர்களில் ஒருவரான 16 வயது சிறுவனுடன் முறைகேடான பாலியல் உறவைப் பேணிவந்த 27 வயது ஆசிரியை ஒருவரை அமெரிக்க பிளயின்பீல்ட் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அஸ்லி புளூமென்சைன் என்ற அந்த ஆசிரியை பிளயின்பீல்ட் நகர பாடசாலையொன்றில் நடனம் மற்றும் உடற்கல்வி பாடங்களைக் கற்பித்து வந்துள்ளார்.

சென்ற செவ்வாய்க்கிழமை இவ்வாசிரியையும் குறித்த சிறுவனையும் பொலிஸார் கார் ஒன்றில் வைத்து கைது செய்துள்ளனர்.

இவர்களின் கைது குறித்து கருத்து தெரிவித்த பொலிஸார், இரண்டு கார்களும் தரிப்பிடத்திற்கு வெகுதொலைவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாகவும். ஒரு காரில் யாரும் இருக்கவில்லையெனவும் மற்றையதில் ஆசிரியை சாரதி இருக்கையில் அமர்ந்திருந்ததாகவும் சிறுவன் பின் ஆசனத்தில் இருந்ததாகவும் எனவே சந்தேகம் கொண்டு இவர்களை கைதுசெய்ததாகவும் தெரிவிக்கின்றனர்.

மேலும் ஆதாரமாக காரிலிருந்து ஆணுறை ஒன்றையும் பொலிஸார் கண்டெடுத்துள்ளனர்.

குறித்த சிறுவன் இக்குற்றத்தினை ஒப்புக்கொண்டுள்ளதுடன் சுமார் 1 மாதமாக இவ்வுறவில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

அஸ்லியின் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல