புதன், 12 ஜனவரி, 2011

நாய்கறி சாப்பிட்டதால் ஃபைன்

தைவான் தலைநகர் தைபேயில் 5 பேர் இரண்டு நாய்களை கொன்று அதன் மாமிசத்தை சமைத்து சாப்பிட்டதாக புகார் கொடுக்கப்பட்டது. தைவான் நாட்டு மக்கள் நாய்க்கறி சாப்பிடுவதில்லை.

அங்கு வசிக்கும் சீன வம்சாவளியினர் சிலர் மட்டும் நாய்க்கறி சாப்பிட்டு வந்தனர். முதன் முதலாக தைவான் நாட்டினர் நாய்கறி சாப்பிட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து நாய்க்கறி சாப்பிட்ட 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.

வேலையில்லாமல் சுற்றிச் திரிந்த இவர்கள் மீது விலங்கு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவர்களுக்கு 1 லட்சம் தைவான் டாலர் (ரூ.1 லட்சத்து 51 ஆயிரம்) அபராதம் விதிக்கப்பட்டது. நாய் மற்றும் பூனை கறி சாப்பிடுவது சட்டவிரோதம் எனவும் தைவான் கோர்ட் அறிவித்தது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல