புதன், 12 ஜனவரி, 2011

மூக்கில் பாய்ந்த குண்டு தும்மலில் வெளியேறிய அதிசயம்

இளைஞர் ஒருவரின் மூக்கில் பாய்ந்த துப்பாக்கி குண்டு, அவர் போட்ட தும்மலால் வெளியேறிய அதிசய சம்பவம் இத்தாலியில் நடந்துள்ளது. இத்தாலியைச் சேர்ந்த டார்க்கோ சாஞ்சர்மனோ(28) என்ற இளைஞர், தன் காதலியுடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொள்வதற்காக, நேப்பிள்ஸ் சென்றார். இந்த நகரம் ரவுடிகளுக்குப் பெயர் பெற்றது.

அப்போது, எங்கிருந்தோ பாய்ந்து வந்த துப்பாக்கி குண்டு ஒன்று, அவரது கண்ணை உரசிக் கொண்டு கன்னம் வழியாக, மூக்கின் ஒரு பாதையில் அடைத்துக் கொண்டு நின்று விட்டது. இதனால், டார்க்கோவுக்கு ரத்தப் போக்கு அதிகளவில் ஏற்பட்டது. அவர், உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டார். டாக்டர்களுக்காக அவர் காத்திருந்த போது தும்மல் போட்டார். அந்த தும்மலில், மூக்கின் பாதையில் நின்ற குண்டு, மூக்கின் வலது துளை வழியாக வெளியே வந்து விழுந்தது.

பின்னர், அவரது கண்ணில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, துப்பாக்கி குண்டின் சிதறல்கள் அகற்றப்பட்டன. இந்த அறுவை சிகிச்சை பல மணிநேரம் நடந்தது. எனினும் ,"டார்க்கோவின் கண் பார்வை பாதிக்கப்படாது; சிறிது காலத்திற்கு பார்வை மங்கி இருக்கும்' என்று டாக்டர்கள் தெரிவித்தனர். இன்னும் சில வாரங்களில், அவரது விழித் திரையில் "லேசர்' மூலம் அறுவை சிகிச்சை நடக்க இருக்கிறது. அதன் மூலம், அவரது கண் மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பிவிடும்.Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல