புதன், 12 ஜனவரி, 2011

டீன்ஏஜ் பெண்களை வைத்து விபச்சாரம்

இங்கிலாந்தில் டீன்ஏஜ் பெண்களை வைத்து பாலியல் தொழில் செய்த பாகிஸ்தானியர் உள்பட 9 பேர் ‌கைது செய்யப்பட்டனர். இங்கிலாந்தின் கிரேட்டர் மான்செஸ்டர் மாகாணத்தில் உள்ள ரூச்தாலோ, ஹெய்வுட் நகரில் பி.எம். டபிள்யூ. சொகுசு காரில் சந்தேகத்திற்கிடமான வகையில் டீன்ஏஜ் பெண்களும், அவர்களுடன் சில வாலிபர்களும் திரிவ‌தை கண்டு போலீசார் ‌அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் டீன்ஏஜ் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது தெரியவந்தது. இதை‌யடுத்து 9 வாலிபர்களை கைது செய்தனர். இவர்களில் பலர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும், பிடிபட்ட டீன்‌‌ஏஜ் பெண்களில் 13 வயது முதல் 16 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறினார்.

மேலும் கிரேட்டர் மான்செஸ்டர் மாகாணத்தின் போலீஸ் சூப்பிரண்டு ஜான் -ஒ ஷியர் செய்தியாளர்களிடம் ‌கூறுகையில், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த டீன்ஏஜ் பெண்களை சில வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் தான் பணத்தாசை காட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வருகின்றனர். சிலர் வறுமை காரணமாக இந்த கும்பல்களிடம் சிக்கிக்கொள்கின்றனர் என்றார். ‌
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல