புதன், 12 ஜனவரி, 2011

இலங்கை அகதிகள் தொடர்பான படத்திற்கு இந்தியாவில் தடை

செங்கடல் திரைப்படத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளை அழிக்க யுத்தம் நடத்தும் இலங்கை அரசை அகதிகள் விமர்சிப்பது போன்ற வசனங்களும் தமிழக அரசுக்கு எதிரான வசனங்களும் இடம் பெற்றுள்ளதால் தணிக்கை குழு தடை விதித்து அனுமதி மறுத்துள்ளது என இந்திய ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே 2009 பிப்ரவரி முதல் மே மாதம் வரை உச்சக்கட்ட யுத்தம் நடைபெற்றது. அப்போது கூட்டம், கூட்டமாக அகதிகள் இந்திய தனுஷ்கோடி பிரதேசத்துக்கு சென்றனர். அவர்களையும், தனுஷ் கோடியில் வசித்த மீனவர்களையும் இணைத்து செங்கடல் என்ற பெயரில் படம் தயாராகியுள்ளது. லீனா மணிமேகலை இத் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பில் டைரக்டர் லீனா மணிமேகலை கருத்து தெரிவிக்கையில், செங்கடல் படத்தில் தனுஷ்கோடி மீனவர்களையும் இலங்கையில் யுத்தம் நடந்தபோது தமிழகம் வந்த அகதிகளையும் நடிக்க வைத்தோம். அவர்கள் பேசும் வசனங்கள் யதார்த்தமாக அப்படியே பதிவு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை அரசையும், இங்குள்ள அரசையும் அவர்கள் விமர்சிப்பதை ஏற்க முடியாது என தணிக்கை குழுவினர் அனுமதி மறுத்தனர். வசனங்களை நீக்க சொன்னார்கள். பேச்சுரிமையை நசுக்குவது ஜனநாயகத்துக்கு விரோதமானது. தணிக்கை குழு தடையை எதிர்த்து டெல்லி டிரிபியூனல் கோர்ட்டில் வழக்கு தொடர இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல