புதன், 12 ஜனவரி, 2011

லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை தொடர்பில் நோர்வே, புலிகளை சாடியிருந்தது – விக்கிலீக்ஸ்!

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலைச் சம்பவம் தொடர்பில் நோர்வே அரசாங்கம், புலிகளை சாடியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகள் எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டிருந்தாலும், இலங்கை மக்களும், உலக மக்களும் இந்தப் படுகொலைச் சம்பவத்திற்கு புலிகளே பொறுப்பு என கருதுவதாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

லக்ஸ்மன் கதிர்காமர் படுகொலை தொடர்பில் நோர்வே அரசாங்கம் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்திருந்தது.

சிறுவர்களை பலவந்தமான முறையில் படையில் இணைத்துக் கொள்வது குறித்தும் நோர்வே அதிருப்தி வெளியிட்டிருந்தது. யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீறும் வகையில் செயற்படக் கூடாது எனவும் அவ்வாறு செயற்பட்டால் சர்வதேச சமூகத்தின் கண்டனத்தை சம்பாதிக்க நேரிடும் என நோர்வே எச்சரிக்கை விடுத்துள்ளது.

புலிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட, நோர்வே அரசாங்கத்தின் எச்சரிக்கை கடிதத்தின் பிரதி அமெரிக்க தூதரகத்திற்கும் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கதிர்காமர் படுகொலை தொடர்பிலான பொறுப்பை புலிகள் ஏற்றுக்கொள்ளவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல