புதன், 12 ஜனவரி, 2011

விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்படும் 10 பேர் சுவிட்சர்லாந்தில் கைது

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் என சந்தேகிக்கப்படும் 10 பேர் சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு சட்டமா அதிபரின் அலுவலகம் அறிவித்துள்ளது.

அந்நாட்டின் அல்பைன் பிரதேசத்தில் நடத்தப்பட்ட தேடுதல்களின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் பல வருடங்களாக அவ் இயக்கத்திற்காக அங்குள்ள இலங்கையர்களை மிரட்டி பலவந்தமாக நிதி சேகரிப்பில் ஈடுபட்டுள்ளதாகவும், மணி லோண்டரிங் ( Money laundering ) போன்ற குற்றங்களில் ஈடுபட்டிருப்பதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சேகரிக்கப்பட்ட நிதியானது இலங்கைக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும், அதிகமானவை அவ் இயக்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டதாகவும் சட்டமா அதிபரின் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.


Swiss prosecutors have established a toll free line 0800 10 20 60, calling on witnesses or victims to come forward if they had information on how the LTTE operate.


Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல