புதன், 12 ஜனவரி, 2011

ஈரானில் மனித உரிமை பெண்ணுக்கு 11 ஆண்டு ஜெயில் தண்டனை

ஈரான் நாட்டில் மனித உரிமைகளுக்காக போராடி வந்த பெண் வழக்கறிஞர் நஸ்ரின் சோட்டோடுடெக். இவர் அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஈரானிய பெண் ஷரீன் எபாடி தலைமையில் செயல்படும் மனித உரிமை பாதுகாப்பு மையத்தில் உறுப்பினராக இருந்தார். அவர் மனித உரிமைகளுக்காக அரசாங்கத்தை எதிர்த்து போராடிவந்தார். இதனால் கோபம் கொண்ட அரசாங்கம் கடந்த செப்டம்பர் மாதம் இவரை கைது செய்து சிறையில் அடைத்தது.

இவர் மீது தேசப்பாதுகாப்புக்கு எதிராக செயல்பட்டதாக கூறி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு 11 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் 20 ஆண்டுகளுக்கு வக்கீல் தொழில் செய்யவும் தடை விதிக்கப்பட்டு உள்ளதாக அவரது கணவர் தெரிவித்தார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல