செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

4 வருட காலமாக மண்டையோட்டை கத்தி ஊடுருவி இருப்பதை அறியாத நபர்

தனது தலையில் 4 அங்குல நீளமான கத்தி முனையொன்று இருப்பதை 4 ஆண்டுகளாக நபரொருவர் அறியாது வாழ்ந்த விசித்திர சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.

யுனான் மாகாணத்தைச் சேர்ந்த லிபு என்ற மேற்படி நபர் (37 வயது), கடும் தலைவலிக்காக மருத்துவரிடம் சிகிச்சை பெற வந்தபோதே உண்மை வெளிச்சமாகியுள்ளது.

2006 ஆம் ஆண்டு கொள்ளைச் சம்பவ மொன்றின் போது லிபு கத்திக்குத்துக் காயத்துக்கு ஆளாகினார்.

அச்சமயம் அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் கத்தி முனையின் ஒரு பகுதி அவரது மண்டையோட்டை ஊடுருவிய நிலையில் இருந்தமையை கவனிக்கத் தவறியிருந்தனர்.

இந்நிலையில் லிபு கடந்த மாதம் தனக்கு கடும் தலைவலி ஏற்பட்டுள்ளதாக கூறி மருத்துவர்களிடம் சிகிச்சை பெறவந்தார்.

மருத்துவர்கள் பல்வேறு சிகிச்சைகளை மேற்கொண்டும் லிபுவின் தலைவலி குணமாகாததால் அவரது தலையை “எக்ஸ்ரே' படம் எடுக்க முடிவு செய்யப்பட்டது. “எக்ஸ்ரே' படத்தில் லிபுவின் மண்டை யோட்டை கூரிய கத்திமுனையொன்று ஊடுருவி இருப்பதைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து யுக்ஸி நகரிலுள்ள பொது மருத்துவமனையில் அறுவைச் சிகிச்சை மூலம் லிபுவின் தலையை ஊடுருவிய கத்திமுனை அகற்றப்பட்டது.

4 வருடங்களாக மண்டையோட்டை கத்திமுனை ஊடுருவிய நிலையில் லிபு உயிர் பிழைத்திருந்தமை அபூர்வ நிகழ்வாக உள்ளதாக அவருக்கு சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் லியோ ஸிவேயி கூறினார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல