செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

மனைவியை அடித்து காயப்படுத்திய கணவரை நையப்புடைத்த பெண்கள் (காணொளி இணைப்பு)

தனது மனைவியை அடித்து உதைத்து காயப்படுத்திய கணவர் ஒருவர், உள்ளூர் பெண்களால் பிரம்பாலும் சவுக்காலும் நையப்புடைக்கப்பட்ட சம்பவம் பெருவில் இடம்பெற்றுள்ளது.

கஜமர்கா நகரைச் சேர்ந்த நோர்பேர்ட் டோ குருஸ் சன்டுவி (47 வயது) என்ற கணவரே தனது இளம் மனைவியான ரோஸா எலனா ரோஜஸ் மொரேனோவை (23 வயது) அடித்துக் கொடுமைப்படுத்திய குற்றச்சாட்டில் பெண்களால் தண்டனைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

கணவனால் தாக்கப்பட்டு தாக்கப்பட்டு ரோஸா எலனா தலையில் கடும் காயங்களுக்கு உள்ளாகியதையடுத்து கணவர் ஊர் பெரியவர்களால் விசாரணைக்குட்படுத்தப்பட்டார். இதன்போது அங்கிருந்த பெண்கள் சினமடைந்து நோர்பேர்டோ குருஸை பிரம்பாலும் சவுக்காலும் அடிக்க ஆரம்பித்தனர்.
மனைவியை தாக்கி காயப்படுத்திய நோர்பேர் டோ குருஸுக்கு பாடம் புகட்ட எதிர்பார்த்திருந்த ஊர் பெரியவர்கள், அவரைத் தாக்கிய பெண்களை தடுக்காமல் வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்துள்ளனர்.

இந்த சம்பவத்தின் போது படையினரும் அங்கு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல