செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

கற்பழிப்பில் இருந்து சிறுமியை காப்பாற்றிய நாய்

மாதிரிப்படம்
இத்தாலி நாட்டில் உள்ள மிலன் நகரை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருத்தி, ஒரு பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது ஒரு நாயுடன் 40 வயது ஆசாமி ஒருவர் அந்த பூங்காவுக்கு வந்தார். அந்த நாயை பார்த்ததும் அதன் அழகில் கவரப்பட்டு அந்த சிறுமி அந்த நாயுடன் விளையாடினாள். அந்த பெண்ணை கவனித்த நாயின் எஜமானர் அந்த சிறுமியை தேநீர் அருந்த அழைத்தார். அதற்கு சம்மதித்து வந்த சிறுமியை அவர் கற்பழிக்க முயன்றார்.

அப்போது அந்த நாய் குலைத்து அவரது கவனத்தை திசை மாற்றியது. இந்த இடைவெளியில் அந்த சிறுமி அவரை தாக்கி விட்டு அங்கு இருந்து தப்பி ஓடிவிட்டாள். அதன்பிறகு அந்த சிறுமி போலீசில் புகார் செய்தார். நாயின் பெயரை அவள் நினைவில் வைத்து இருந்தாள். அதை வைத்து அந்த நாயின் எஜமானரை போலீசார் கண்டு பிடித்தனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல