செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

கரண்டியால் புலியை அடித்து விரட்டி கணவனின் உயிரை காப்பாற்றிய மனைவி

தனது கணவன் மீது பாய்ந்து அவரைக் கடித்துக் குதற தயாரான புலியை பெரிய மரக்கரண்டியொன்றால் அடித்து பெண்ணொருவர் விரட்டிய சம்பவம் வட மலேசியாவில் இடம்பெற்றுள்ளது.

மலேசியாவின் காட்டுப் பகுதியில் பாரம்பரிய வேட்டைத் தொழிலில் ஈடுபட்டு வரும் ஜகாய் பழங்குடியினத்தைச் சேர்ந்த பெண்ணே இவ்வாறு துணிச்சலுடன் புலியை விரட்டி கணவனின் உயிரைக் காப்பாற்றியுள்ளார்.
சம்பவதினம் தம்புன் ஜெடியு என்ற மேற்படி நபர், அணில் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது புலியொன்று அவர் மீது பாய்ந்துள்ளது.

இந்நிலையில் புலியுடன் போராடிய தம் புன் ஜெடியு, புலியின் வாயை இறுக பிடித்த படி தன்னைக் காப்பாற்றுமாறு அபயக் குரல் எழுப்பியுள்ளார்.

குரல் கேட்டு பெரிய மரக்கரண்டியுடன் அங்கு வந்த அவன் மனைவி, அக்கரண்டியால் புலியின் தலையில் ஓங்கி அடிக்கவும் புலி அதிர்ச்சியடைந்து பின்வாங்கி காட்டுக்குள் ஓடி மறைந்தது.
இதனையடுத்து தலையிலும் கை, கால்களிலும் கடிகாயங்களுக்கு ஆளாகிய நிலையில் தம்புன் ஜெடியு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மனைவி மட்டும் தக்க தருணத்தில் வந்து காப்பாற்றவில்லையென்றõல் தான் புலியால் கடித்துக் குதறப்பட்டு உயிரிழந்திருக்க நேரிட்டிருக்கும் என தம்புன் ஜெடியு கூறினார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல