செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

“பேஸ் புக்' இணையத்தளம் மூலம் அறிமுகமான நண்பர் மீது காதல் கொண்ட மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவன்

“பேஸ்புக்' இணையத்தளம் மூலம் அறிமுகமான நண்பர் ஒருவர் மீது காதல் கொண்ட பிரித்தானிய மனைவியை 23 தடவைகள் கத்தியால் குத்தி படுகொலை செய்த செல்வந்த அமெரிக்கப் பொறியியலாளர் தொடர்பான வழக்கு பிரித்தானிய நீதிமன்றமொன்றில் விசாரணைக்குட்படுத்தப்பட்டது.

ஹரோல்ட் லாண்ட்றி என்பவரே இவ்வாறு தனது மனைவி லூசியை கத்தியால் குத்தி படுகொலை செய்துள்ளார்.

செல்வந்தரான ஹரோல்ட் லாண்ட்றிக்கும் லூசிக்கும் இணையத்தளம் மூலம் முதன் முதலாக பழக்கம் ஏற்பட்டது.

இதனையடுத்து 2002 ஆம் ஆண்டு பிரித்தானியா வந்த லாண்ட்றி, லூசியை திருமணம் செய்துள்ளார்.

இந்நிலையில் 2009 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் லூசிக்கு “பேஸ் புக்' இணையத்தளத்தின் மூலம் அவரது முன்னாள் பாடசாலை நண்பரான கரெத் ஜென்கின்ஸின் தொடர்பு கிடைத்தது.

காலப் போக்கில் அவரது “பேஸ் புக்' தொடர்பாடல் காதலாக மலர்ந்தது.
இதனையடுத்து லூசி, லாண்ட்றியிடமிருந்து விவாகரத்து பெறும் முயற்சியில் ஈடுபட்டார்.

தான் வீட்டில் இல்லாத போது தனது மனைவி ஜென்கின்ஸை வீட்டிற்கு வரவழைத்து அவருடன் காதல் சரமாடுவதை அறிந்த ஹரோல்ட் லாண்ட்றி சினமடைந்தார்.

புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளாகியிருந்த லாண்ட்றி, லூசிக்கு எதுவித அனுகூலம் கிடைக்காத வகையில் தனது உயிலை மாற்றி எழுதியுள்ளார்.
இதனையடுத்து அவருக்கும் லூசிக்கும் இடையே இடம்பெற்ற வாக்குவாதமே படுகொலையில் முடிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல