செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

பூகம்பம் எப்போது எங்கு ஏற்படும் என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ள உதவும் செயற்கைக்கோள்கள்

பூகம்பம் எப்போது எங்கு ஏற்படும் என்பதை செயற்கைக்கோள் மூலம் முன்கூட்டியே தெரிந்து கொள்வதற்கான திட்டத்தில் விஞ்ஞானிகள் ஈடுபட்டு இருக்கிறார்கள். இதற்கான ஒப்பந்தத்தில் இங்கிலாந்து மற்றும் ரஷிய விஞ்ஞானிகள் கையெழுத்திட்டு இருக்கிறார்கள். இந்த திட்டத்தில் மாஸ்கோ நகரில் இருந்தபடி இரு நாட்டு விஞ்ஞானிகளும் ஈடுபட இருக்கிறார்கள். இதற்காக 2 செயற்கைக்கோள்களை ரஷியா - இங்கிலாந்து விஞ்ஞானிகள் விண்ணுக்கு அனுப்ப இருக்கிறார்கள்.

இவர்கள் அனுப்பும் செயற்கைக்கோள்கள்பூமியை சில நூறு கி.மீ. தூரத்துக்கு மேல் தனித்தனியே சுற்றி வந்த படி பூமியின் எந்த பகுதியில் செஸ்மிக் நடவடிக்கைகளையும், எரிமலை நடவடிக்கைகளையும் கண்காணிக்கும்.

செயற்கைக் கோள்களில் இருந்து கிடைக்கும் தகவல்களை வைத்து முன்கூட்டியே சம்பந்தப்பட்ட நாடுகளை விஞ்ஞானிகள் எச்சரிப்பார்கள். இதன் மூலம் பூகம்பத்தால் உயிர் இழப்பு ஏற்படுவது தடுக்கப்படும்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Al Jazeera – Breaking News, World News and Video from Al Jazeera

About This Blog

BBC News | South Asia | World Edition

CNN.com - RSS Channel - HP Hero

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல