செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

மனைவியையும் இரு மகள்மாரையும் படுகொலை செய்த நபர் தானும் தற்கொலை

தனது மனைவியையும் இரு பிள்ளைகளையும் படுகொலை செய்த நபரொருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பிரித்தானியாவில் இடம் பெற்றுள்ளது.

ஈராக்கை பிறப்பிடமாகக் கொண்ட அராம் அஸீஸ் என்பவரே தனது மனைவியான ஜொய் ஸ்மோல் (24 வயது), மகனான அயுபார் (8 வயது), மகளான சனாரா (2 வயது) ஆகியோரை படுகொலை செய்த பின்பு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

அராம் அஸீஸின் சடலம் கடந்த வெள்ளிக் கிழமை மாலை பூங்காவொன்றில் கண்டெடுக்கப்பட்டது. அதற்கு மறுநாள் சனிக்கிழமை மாலையே அவரது மனைவியதும் பிள்ளைகளதும் சடலங்கள் லெயிசெஸ்டர் நகரிலுள்ள வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டது.

ஏற்கனவே திருமணம் செய்த ஜொய் ஸ்மோலுக்கு அத்திருமணத்தின் மூலம் 7 வயது மகன் ஒருவர் உள்ளார்.

அச்சிறுவன் தனது சொந்த தந்தையான ஜாவித் கஸ்நாவியின் (வயது 32) பராமரிப்பில் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் அராம் அஸீஸூம் ஜொய் ஸ்மோலும் முரண்பாடு ஏற்பட்டு பிரிந்தனர். எனினும் பின்னர் அவர்கள் சேர்ந்து வாழ ஆரம்பித்தனர்.

அராம் அஸீஸ், ஜொய் ஸ்மோல் மீது பெற்றோலை ஊற்றி அவரை தீ வைத்து கொளுத்த முயற்சித்ததையடுத்தே அவர்கள் பிரிந்தனர்.

அராம் அஸீஸ் ஜொய் ஸ்மோலிடமிருந்து பிரிந்தபோது, ஜொய்ஸ்மோலையும் பிள்ளைகளையும் கொல்லப் போவதாகவும் ஜொய் ஸ்மோல் பிறிதொரு காதலைரை ஒரு போதும் தேடிக்கொள்ள முடியாது எனவும் எச்சரிக்கை குறிப்பொன்றை விட்டுச் சென்றிருந்தார்.

இந்நிலையில் அச்சமடைந்த ஜொய் ஸ்மோல் வாயிலில் எச்சரிக்கை மணி யொன்றை பொருத்தியதுடன் தற்பாதுகாப்பு கருதி தனது தலையணையின் கீழ் சுத்தியலொன்றை எப்போதும் வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதே சமயம் கணவரிடமிருந்து பிரிந்த ஜொய் ஸ்மோல், தான் ஒரு புதிய காதலரை தேடிக் கொண்டதாக தனது நண்பர்களிடம் கூறியுள்ளார்.

இந்நிலையில் ஜொய் ஸ்மோல் அராம் அஸீஸுடன் மீளவும் இணைந்து கொண்டது பலருக்கும் திகைப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த படுகொலை தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல