செவ்வாய், 22 பிப்ரவரி, 2011

பெறா மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி 8 பிள்ளைகளுக்கு தாயாக்கிய நபர்

தனது மனைவிக்கு முந்திய திருமணத்தின் மூலம் பிறந்த மகளை பாலியல் துஷ்பி ரயோகம் செய்து 8 குழந்தைகளுக்கு தாயாக்கியதை மாற்றாந் தந்தையொருவர் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்ட சம்பவம் ஜேர்மனி கொப்ளென்ஸ் நகரில் இடம்பெற்றது.
மனைவியும் இரு மகன்களும்
டெட்லெப் எஸ் (48 வயது) என சுருக்கப் பெயரால் அழைக்கப்படும் இந்நபர், 1987 ஆம் ஆண்டுக்கும் 2010 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் தனது மனைவியின் முதல் தார மகளை மட்டுமல்லாது மகனையும் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் அவர், மேற்படி பெறாமகளையும் தனது சொந்த மகளொருவரையும் பணத்தை கட்டணமாக பெற்று வேறு ஆண்களுக்கும் பாலியல் துஷ்பிரயோகப்படுத்த பல தடவைகள் அனுமதி வழங்கியுள்ளார்.

அவரது இரு பெறாமகன்கள் செய்த றைப்பாட்டையடுத்தே இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

டெப்லெப் எஸ், தனது சொந்த மகளையும் 11 வயது முதற்கொண்டே பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி வந்ததாக தெரிவிக்கப்பட்ட பிறிதொரு குற்றச்சாட்டு போதிய மருத்துவ ஆதாரங்கள் இல்லாததால் கைவி டப்பட்டது.

டெட்லெப் எஸ்ஸின் பெறாமகளுக்கு பிறந்த பிள்ளைகளில் 7 பேர் மட்டுமே தற்போது உள்ளனர். 8 ஆவது பிள்ளை இறந்தமைக்கான காரணம் கண்டறியப்படவில்லை.

மரபணு பரிசோதனைகளின் மூலம் பெறாமகளுக்கு பிறந்த 7 பிள்ளைகளுக்கும் தந்தை டெட்லெப் எஸ் என்பது நிரூபணமாகியதையடுத்தே, அவர் தனது குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பான அடுத்த கட்ட விசாரணை எதிர்வரும் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

About This Blog

BBC News | South Asia | World Edition

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல